நத்தார் பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் 23, 24, 25, 26 ஆம் திகதிகளில் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி தினங்களில் சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் எதிரொலி காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்வறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
#SrilankaNews
Leave a comment