கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஒன்று காணாமல் போயுள்ளது.
நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பக்தர் ஒருவரால் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தங்கத்தகடே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பகுதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காட்சிகள் உட்பட மேலும் பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews