3 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில்!

202104201622361740 The synoform vaccine can prevent 90 percent of infections SECVPF

இலங்கையில் பயன்படுத்தப்படாத 3 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

26 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளில் 23 மில்லியன் டோஸ்கள் தடுப்பூசிகள் மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் எஞ்சியுள்ளவை காலாவதியான பின்னர் அகற்றப்படும் நிலையில் இருப்பதாகவும் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிற்கு சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தம் நோக்கில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தங்களது இரத்ததிலுள்ள சர்க்கரையின் அளவினை பரிசோதித்துக்கொள்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version