school072446
செய்திகள்உலகம்

பாடசாலையில் தீ -26 மாணவர்கள் சாவு!

Share

பாடசாலை ஒன்றில் தீ விபத்து காரணமாக 26 மாணவர்கள் சாவடைந்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ளபாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான மாரடியில் அமைந்துள்ள பாடசாலையில் கடந்த திங்கள் கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வைக்கோல் கூரை வேயப்பட்ட 3பாலர் வகுப்புகள் மற்றும் ஆரம்ப வகுப்புகள் தீக்கிரையாகின. இதில், 3 முதல் 8 வயது வரை கொண்ட 26 மாணவா்கள் சாவடைந்துள்ளனர் .

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

நைஜா் பாடசாலைகளில் மாணவா்களுக்குப் போதிய இடம் இல்லாததால், தற்காலிகமாக வைக்கோல் கூரைகளைக் கொண்டு வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.

தலைநகா் நியாமேவின் புகா்ப் பகுதியிலுள்ள ஒரு பாசாலையின் தற்காலிக வகுப்புகளில் கடந்த சித்திரை மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...