உலகம் முழுவதிலும் இவ் ஆண்டு 24 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு கடந்த வருடத்தை விட இவ்வருடம் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் 280 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் டிசம்பர் முதலாம் திகதி வரையில் 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவிலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் 50 பேர், மியன்மாரில் 26 பேர், எகிப்தில் 25 பேர், வியட்நாமில் 23 பேர் மற்றும் பெலாரசில் 19 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
#WorldNews
Leave a comment