இந்தியா
நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் மாத்திரமே இந்திய அணியில் இடம்: முன்னாள் வீரரின் ஆதங்கம்
நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் மாத்திரமே இந்திய அணியில் இடம்: முன்னாள் வீரரின் ஆதங்கம்
இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் (Badrinath) கடுமையாக விமர்சித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) உட்பட்ட சில முக்கிய வீரர்கள் இந்த தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் மேற்க்ணடவாறு விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் , “ருதுராஜ் உட்பட சில வீரர்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் போதெல்லாம் தன் திறமையை நிரூபித்திருக்கின்றனர்.
குறித்த வீரர்கள் சிறப்பாக விளையாடியும் அணியில் தெரிவு செய்யப்படாமை ஏன்?
இந்த மாதிரியான சூழலில் இந்திய வீரர்கள், இரண்டு மூன்று பொலிவுட் நடிகைகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். உடம்பு முழுக்க பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும், அதனால் எந்த நேரமும் செய்திகளில் இடம்பிடிக்கலாம்.
அப்படி இருந்தால் தான் இந்திய அணியிலும் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள் என்று நான் நினைக்கின்றேன்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்ரிநாத்தின் இந்த கடுமையான விமர்சனம் சமூகவலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நன்றாக விளையாடி கொண்டிருக்கும் வீரர்கள் ஏன் நீக்கப்படுகிறார்கள் என ரசிகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சம்சன், அபிசேக் சர்மா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சேர்க்கபடாதது குறித்தும் சரமாரி கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும், கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் இந்த முதல் தொடரிலேயே பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
அவர் வேண்டுமென்றே நன்றாக விளையாடும் வீரர்களை புறக்கணித்து என்ன சாதிக்க போகிறார் என்று தெரியவில்லை என்றும் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த கேள்விகளுக்கு கம்பீர் இன்று பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.