tamilni 240 scaled
இந்தியாசெய்திகள்

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

Share

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் வாக்களிப்பார்களா? நடிகை குஷ்பு

பெண்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா என்று நடிகை குஷ்பு சர்ச்சையாக பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் உறுப்பினருமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா? தமிழ்நாட்டில் 3500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே? அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்.

இந்த விவகாரத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை” என்றார்.

முன்னதாக பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளனர். திமுகவில் பிரச்சாரம் செய்ய யாரும் இல்லை. அதனால், கமல் ஹாசன் போன்ற முகம் திமுகவுக்கு பிரச்சாரம் செய்ய தேவை” என்றார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...