rtjy 41 scaled
இந்தியாசெய்திகள்

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

Share

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம்!

இந்திய – சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 23 இந்திய இராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று (03.09.2023) நள்ளிரவில் ஏற்ப்பட்ட மேக வெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இத்திடீர் வெள்ளத்தில் இராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பல இந்திய இராணுவ தளங்கள் மற்றும் பல இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் காரணமாக படையினர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து குவாஹாட்டி இராணுவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், தீஸ்டா ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...