செய்திகள்
ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
குருணாகல், கல்கமுவ – அம்பன்பொல பகுதியில் நபரொருவர் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் முற்பகல் (08-05-2023) இடம்பெற்றுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவரே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரை மாய்ந்துள்ளார்.
இதேவேளை, கல்கமுவ அஞ்சல் அலுவலகத்தில் 16 இலட்சம் ரூபாய் காணாமல் போயுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விசாரணைகளின் ஒரு கட்டமாக தற்கொலை செய்துகொண்டுள்ள நபரின் வீட்டிலும் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சோதளை நடவடிக்கைகள் நிறைவடைந்து சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த நபர் ரயில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் பொலிஸாரின் நடவடிக்கை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login