1796748 man
இந்தியாசெய்திகள்

வாலிபரை கடத்தி பலாத்காரம் செய்த இளம் பெண்கள்! – பொலிஸ் வலைவீச்சு

Share

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் இரவில் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை நோக்கி வந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்துள்ளனர். அவர்கள் ஒரு துண்டு சீட்டை அந்த வாலிபரிடம் கொடுத்து முகவரி கேட்டுள்ளனர்.

தொடர்ந்து அந்த பெண்கள் அவர்மீது ஸ்பிரே அடித்த நிலையில், அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை தங்களது காரில் ஏற்றி சென்று, மறைவான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவரது கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் 4 பெண்களும் மது குடித்ததுடன், அந்த வாலிபரையும் மது குடிக்க வற்புறுத்தியுள்ளனர். பின்னர் 4 பெண்களும் அவரை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதிகாலை 3 மணி அளவில் அவரது கை மற்றும் கண்களை கட்டி ஏதோ ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு 4 பெண்களும் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அந்த வாலிபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண்கள் பணக்காரர்கள் போல தெரிந்தனர். நன்றாக ஆங்கிலம் பேசினர். 2 பெண்கள் என்னிடம் பஞ்சாப் மொழியில் பேசினர் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண்களை பொலிஸார் தேடி வருகிறார்கள். இரவு நேரத்தில் வாலிபரை கடத்தி சென்று பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...