ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 1ம் திகதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் திகதி வரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 தலைமை பதவியில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார்.
#India