இந்தியா
560 யூடியூப் சனல்கள் முடக்கம்!
இந்தியாவில் பரவலாக யூடியூப்பில் செயல்படும் 78 செய்தி சனல்கள் மற்றும் 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதன்படி அதில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் படி மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login