இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் விலகியுள்ளனர்.
இதனை இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையில், இன்றைய தினம் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் நாடளாவிய ரீதியில் இன்று மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் 80% தனியார் தாங்கி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 60 வீதத்தால் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்கக்கோரி இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தினரால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த கோரிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மறுக்கப்பட்ட நிலையில், இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment