mic
செய்திகள்உலகம்

சோவியத் கால போர் விமானங்கள் உக்ரைனுக்கு! -அமெரிக்கா ஆலோசனை

Share

போலந்திடம் உள்ள சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பில் அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சு நடத்திவருகிறது.”வான் பறப்பு தடை வலயம் ஒன்றை அறிவியுங்கள், அல்லது, போர் விமானங்களைத் தாருங்கள் ” என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அமெரிக்க செனட்டர்களிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.

நவீன யுத்த விமானங்களை விடவும் தங்களது விமானிகளுக்குப் பரீட்சியமான – இலகுவாக அவர்களால் இயக்கக் கூடிய – விமானங்களைத் தருவதே பயனுடையது என்றும் அவர் கேட்டிருந்தார். அதனை அடுத்தே, அதிபர் ஜோ பைடன் போலந்து அரசுடன் இது தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

சோவியத் காலத்து – பழைய “மிக் -29″(மிக்-29) போர் விமானங்களையும் “Su-25” தாக்குதல் விமானங்களையும் உக்ரைனுக்கு வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்படவுள்ளது.

போலந்து தன்வசம் உள்ள விமானங்களை உக்ரைனுக்கு வழங்கும். அதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்தை அமெரிக்கா தனது விமானங்களைப் போலந்துக்கு வழங்கி சரிசெய்துகொள்ளும் வகையில் உடன்பாடு அமையவுள்ளது.

இதே உத்தரவாதங்களின் அடிப்படையில் பல்கேரியா, ஸ்லோவேனியா ஆகியனவும் தம்வசம் உள்ள பழைய விமானங்களை உக்ரைனுக்கு வழங்க ஆயத்தமாக உள்ளன. இந்த விமானப் பரிமாற்ற உடன்பாட்டுக்கு அமெரிக்கக் காங்கிரஸின் ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

மேற்குலகின் போர் விமானங்கள் கிடைப்பதற்கு முன்பாக உக்ரைன் படைகளது வான் தளங்களை அழிப்பதில் ரஷ்யா குறியாக உள்ளது. தலைநகரில் இருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள வின்னிற்சியா (Vinnytsia) நகர விமான நிலையத்தை ரஷ்யப்படைகள் குண்டு
வீசித் தாக்கியுள்ளன.

உக்ரைன் நாட்டின் போர் விமானங்கள் தங்கிச் செல்ல ருமேனியா இடமளிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள ரஷ்யா அது போரில் ஒரு தலையீடாகவே பார்க்கப் படும் என்று எச்சரித்துள்ளது.

முந்திய வரலாறு 

அணு ஆயுத பலத்தில் இங்கிலாந்தை விஞ்சியதாக இருந்த உக்ரைன் இன்று பழைய சோவியத் விமானங்களைக் கேட்டு உலகிடம் கையேந்தும் நிலை உருவானதுக்கு புடாபெஸ்ட் உடன்படிக்கையும் (Budapest Memorandum) ஒரு காரணமாகும்.

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பிறகு 1994 டிசெம்பரில் ஹங்கேரி தலைநகரில் அணுவாயுதக் குறைப்புடன் தொடர்புடைய முக்கிய உடன்படிக்கை ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், கசகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் ஒப்பமிட்டன.

இந்த உடன்படிக்கை வழங்கிய உத்தரவாதத்தின் பேரிலேயே உக்ரைன் தனது வசம் இருந்த பெரும் அணுவாயுதக் கிட்டங்கியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதற்கு இணங்கியது. உலகின் அணு வல்லரசுகளாக இருந்த அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து மூன்று நாடுகளும் இந்த உடன்படிக்கையில் உக்ரைனின் “சுதந்திரம் மற்றும் இறையாண்மையையும் அதன் அப்போதைய எல்லைகளையும் மதிக்கவும் ” மற்றும் நாட்டிற்கு எதிரான “அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும்” உறுதியளித்தன.

தன் வசம் இருந்த சுமார் ஆயிரத்து 900 மூலோபாய அணு ஆயுதங்களை உள்ளடக்கிய உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் களஞ்சியத்தைக் கைவிடுமாறு உக்ரேனிய அரசாங்கத்தை வற்புறுத்துவதில் அந்த உறுதிமொழிகள் முக்கிய பங்கு வகித்தன.

இந்த உடன்படிக்கையை மீறியே 2014 இல் ரஷ்யா உக்ரைனின் ஒரு பகுதியாகிய கிரிமியாவை ஆக்கிரமித்து தன்வசம் இணைத்துக் கொண்டது. உக்ரைன் போர் பற்றிய விவாதங்களில் பலர் இந்த புடாபெஸ்ட் ஒப்பந்த மீறலைக் குறிப்பிடத் தவறுவதை அவதானிக்க முடிகிறது.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...