செய்திகள்
பதவி விலகபோவதில்லை! – சி.பி.ரத்நாயக்க


” அமைச்சு பதவியில் இருந்து நான் விலகப்போவதில்லை. எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்.” – என்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் அமைச்சு பதவியை துறக்கவுள்ளதாகவும், அமைச்சில் இருந்து பொருட்களை தயார்படுத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை போலியானவை. அத்துடன், எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சு பதவி கிடைத்ததால் நான் கலக்கம் அடையவில்லை. நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சரை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் உள்ளன. சிறப்பாக சேவையை முன்னெடுக்க முடியும்.” – என்றார்.