A
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் காட்டு பகுதியில் பதுக்கிவைக்கப்பட்ட மாத்திரைகள் மீட்பு!

Share

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் நேற்று அதிகாலை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வாளர் களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன் நடுக்குடா காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஒரு தொகுதி மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டன.

சோதனையின் போது குறித்த மாத்திரைகள் உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் என தெரிய வந்துள்ளதோடு, குறித்த இரு பெட்டிகளில் இருந்து 60 ஆயிரம் மாத்திரைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மீட்கப்பட்ட மாத்திரைகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தலை மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...