நாட்டில் எரிபொருள், மின்சார பற்றாக்குறையை அடுத்து நீருக்கும் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது.
இதன் எதிரொலியாக வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
#SrilankaNews
Leave a comment