IMG 20220302 WA0001
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சன் விவகாரம்! – சர்வதேச நாடாளுமன்றை நாடுகிறது எதிரணி

Share

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளனர்.

ஜெனிவாவில் வைத்து இருவரும் வெளியிட்டுள்ள காணொளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” ரஞ்சன் ராமநாயக்கவுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அவரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஜெனிவா வந்துள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.

அத்துடன், சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் ஆகியவற்றிடமும் முறையிடப்படும். மேற்படி அமைப்புகளுடன் இலங்கைக்கு உடன்படிக்கைகள் உள்ளன. எனவே, அதன்பிரகாரம் செயற்பட வேண்டிவரும். ரஞ்சனுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு.” – என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...