நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிநடைபோடும் – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சாரக்கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தற்போது பல கூறுகளாக பிளவுபட்டுள்ளதாகவும், அரசுக்கான மக்கள் ஆதரவு குறையவில்லை எனவும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்ன குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment