செய்திகள்அரசியல்இலங்கை

13 ஆவது திருத்தத்தை ஏற்கவில்லை!! – மனோ

Mano
Share

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த நாட்டிலே விசயம் புரியாத நபர்கள் பலர் தெற்கிலும் உள்ளனர். வடக்கிலும் வாழ்கின்றனர். தெற்கில் உள்ள நபர்களில் ஜனாதிபதி முதன்மையானவர். அவரின் சுதந்திர தின உரையை செவிமடுக்கையில் சிரிப்புதான் வந்தது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு, முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்குச்சென்றுவிட்டனர். புலம்பெயர் தமிழர்களிடம் பணம் உள்ளது. கோட்டா ஆட்சியில் அவர்கள் இங்கு வருவார்களா? வரமாட்டார்கள்.

எனவே, சஜித் தலைமையில் அமையும் ஆட்சியில் நாம் நிச்சயம் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்போம்.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. அனைவரும் ஒன்றிணைந்தால்தான் நாடு முழுமைப்படும். அதுவரைக்கும் இந்த நாடு உருப்படாது. நாம் அனைவரும் இலங்கையர்கள். அதற்கு பிறகுதான் இனம் எல்லாம் வரும்.

13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழு தீர்வாக ஏற்கவில்லை. அதேபோல சிங்கள மக்களின் ஆசியின்றி தீர்வை பெறமுடியாது. இது எனக்கு மட்டுமல்ல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கும் தெரியும். எனவே, இருப்பதையும் இழக்காமல், முன்னோக்கி செல்வோம் என்பதை விசயம் புரியாதவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...