20220123 204109 scaled
செய்திகள்அரசியல்இலங்கை

சிங்கள தலைவர்களின் வழிநடத்தலில் இங்குள்ள தமிழ் கட்சிகள்! – குற்றம்சுமத்துகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Share

இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சாடியுள்ளது.

இந்தியாவின் கைக்குள்ளே நின்று கொண்டு சிங்கள தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலே மக்களின் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

13ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக யாழில் இன்று இடம்பெற்ற பேரணியின் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

34 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியை இப்போதும் தூக்கி பிடிக்கும் 11 பேர் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும். சீனாவை நாம் இங்கே விட மாட்டோம் அதற்கு நாம் உதவுவோம். நீங்கள் இந்த ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என தமிழ் கட்சிகள் இப்போது கையேந்தி நிற்கின்றனர்.

இந்தியாவுடன் பேரம் பேசியுள்ளனர். மக்களே அடுத்த தேர்தலில் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம். ஆனால் 13 ஆம் திருத்தத்துக்கு எதிராக செயற்படுங்கள். 13ஐ ஆதரிப்பவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ள தற்போதைய ஆட்சியாளர்களுக்கு, இவர்கள் நன்றாக முண்டு கொடுக்கிறார்கள் என சாடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் தொடரும் என்றும் சூழுரைத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...