சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் புகையிரதம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 6.45 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிவேக புகையிரதத்தில் மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்னால் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போதே மாணவனை புகையிரதம் மோதியுள்ளது.
உயிரிழந்தவர் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான வரணி இயற்றாலையைச் சேர்ந்த உதயகுமார் பானுஜன் (வயது-17) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$SriLankaNews
Leave a comment