” 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பிரபாகரன்தான் என்னை தோற்கடிக்க வைத்தார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவால் ஏன் இன்னும் ஜனாதிபதியாக முடியாமல் உள்ளது என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
” நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994 இல் சந்திரிக்காமீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.
அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு பிரபாகரனே தீவிரமாக செயற்பட்டார்.
அதன்பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் பொதுவேட்பாளர்கள்தான் களமிறங்கினர்.
இனிவரும் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. நபர்களைவிடவும் கொள்கைகளே முக்கியம்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment