maithripala sirisena
செய்திகள்அரசியல்இலங்கை

எதற்கும் தயார்! – மைத்திரிபால சிறிசேன

Share

” சுசில் பிரேமஜயந்தவுக்கு இன்று நடந்தது, நாளை நமக்கும் நடக்கலாம். எதற்கும் தயாராகவே இருக்கின்றோம்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குருணாகலையில் இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துவருகின்றோம். இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணிநேரத்துக்குள் அதிஷ்டம் அடித்தது. நாளை எமக்கும் அது நடக்கலாம். எனவே, எதற்கும் தயாராகவே இருக்க வேண்டும்.

அரசை விமர்சிப்பதற்கு எனக்கு தகுதியில்லை எனவும், நீங்களும் ஜனாதிபதியாக இருந்தவர்தானே எனவும் சிலர் வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

எனது தலைமையில் அமைந்த ஆட்சியானது மாறுபட்டதொன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் அவ்வாறானதொரு அரசு இன்னும் அமையவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்பட்டன. தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19 மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு கிட்டும்.” – என்றார் மைத்திரிபால சிறிசேன.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...