2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நாளை நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது பதிலளித்து உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் பாதீட்டில் திருத்தங்கள் செய்ய இருப்பின் அவை தொடர்பான அறிவிப்புகளை விடுப்பார்.
அதன்பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன எதிராக வாக்களித்தன. அரசும் அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.
அதேவேளை, கட்சி முடிவை மீற ஹக்கீரம், ரிஷாட் கட்சி உறுப்பினர்கள் பாதீட்டை ஆதரிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment