கந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று கவிழ்ந்ததில் தெவிநுவர – கப்புகம பகுதியைச் சேர்ந்த 64 வயதான மீனவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.
குறித்த மீனவர் மேலும் நால்வருடன் ‘பியூமிகா 02” என்ற நீண்ட நாள் மீன்பிடி படகில் கடந்த 28 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.
மீனவர் சென்ற படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதுடன், அலையுடன் படகு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த படகிலிருந்த ஏனைய மீனவர்கள் மற்றுமொரு படகின் மூலம் தப்பியுள்ளனர்.
#SrilankaNews
Leave a comment