செய்திகள்
3 குழந்தை பெறும் தம்பதிகளுக்கு இவ்வளவு சலுகையா!!!
சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 141.2 கோடியாகும். கடந்த 1976 முதல் 2016 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் தம்பதியருக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்புதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
சீனாவில் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மகப்பேறு விடுப்பு, திருமண விடுமுறையை நீடித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்து கொள்ள ஆண்களுக்கு விடுமுறை அதிகரிப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் சீன மக்களுக்கு மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புவதாக சீன அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
#WorldNews
You must be logged in to post a comment Login