உங்களின் பாதுகாப்பிற்காக நாம்: துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (08) மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

வீதி விபத்துக்களை குறைப்பதற்காக “உங்களின் பாதுகாப்பிற்காக நாம்” எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.

Jaffna Sticker 02

இந்தநிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக வைத்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட பொலீஸ் நிலையங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைவாக, மாவட்ட போக்குவரத்துப் பிரிவு மற்றும் யாழ்ப்பாண பொலீஸ் போக்குவரத்து பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையினை இன்று முன்னெடுத்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையில்,

யாழ்ப்பாண போக்குவரத்து பிரிவு பொலிஸ் பரிசோதகர் மஞ்சுல டி சில்வா, உப பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அபேயரத்ன, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விதான பத்திரன, உள்ளிட்ட சில பொலிஸார் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version