குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து:10 இற்கும் மேற்பட்டோர் பலி (வீடியோ)

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sulur02

இன்று (08) நடக்க இருந்த இராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள இராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கிச் சென்றனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவியது.

இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தில், அதில் பயணித்த 4 இராணுவ வீரர்கள் பலியானதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#IndiaNews

Exit mobile version