சபாநாயகரைச் சந்தித்தார் சீனத் தூதுவர்!

China ambos

சீனத் தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

#SrilankaNews

Exit mobile version