செய்திகள்
டெங்கு கட்டுப்பாடு வாரம்!!


யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், நேற்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப்பகுதியை பிரதேச மட்டத்திலும் கிராம மட்டத்திலும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும் . அனைத்து நிறுவனங்களிலும் இதனை செயற்படுத்த வேண்டும்.
வடமாகாணத்தில் 238 பேர் இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அவற்றில் யாழில் 147 பேரும் மன்னாரில் 25 பேரும், கிளிநொச்சியில் 25 பேரும், முல்லைத்தீவில் 36 பேரும், வவுனியாவில் 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.