download 1 1 1
செய்திகள்இலங்கை

நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம் – நியாஸ் ப்ரோஹி

Share

“நாங்கள் வெட்கத்தால் தலை குனிகிறோம், நாம் பார்வையை இழந்து விட்டோம் ” என்று பாகிஸ்தானின் முன்னணி கண் வைத்தியர் நியாஸ் ப்ரோஹி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவதனவின் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இலங்கை கண் தான சங்கத்திற்கு எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த ப்ரோஹி,

உலகின் பல்வேறு நாடுகளுக்கு இலங்கை 83,200 விழிவெண்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளன.

இலங்கையின் நன்கொடைகளில் 40 சதவீத்தை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டுள்ளது. அதாவது 1967 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 35,000 விழிவெண்படலங்களை பாகிஸ்தான் பெற்றுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானே இலங்கையிடமிருந்து கண்தானம் பெறுவதில் முதலிடத்தில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் எரிபொருள் கையிருப்பு விபரம்: வலுசக்தி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உரை!

சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர்...

07 16
செய்திகள்இந்தியா

ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்: “ரஜினிகாந்த் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவர்”

நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்குப் பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)...

06 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளுக்குப் புதிய வழிகாட்டுதல்கள்: புதன்கிழமை விடுமுறை மற்றும் கல்விச் சுற்றுலாக்களுக்குத் தடை!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கல்விச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கல்வி,...

05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...