செய்திகள்
மீண்டும் பால்மா தட்டுப்பாடு!


புதிய கையிருப்புகள் கிடைக்கப்பெறாமையினால் மீண்டும் பால்மாவிற்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கொடுப்பனவுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக வெளிநாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை என்று இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளாா்.
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் தேசிய பால்மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.