மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று அதிகாலை பயணித்த ரயிலுடன் மோதியே அந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment