இந்தியா – ரஸ்யா இடையே 5,200 கோடி பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து!

india and russia

இந்தியா – ரஷ்யா இடையே 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கும் இரு நாடுகள் இடையேயான 21 ஆவது உச்சிமாநாடு இன்று (06) டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தநிலையில் ரஷ்ய நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

21 ஆவது மாநாட்டிற்கு முன்னர், இருநாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போதே குறித்த இவ்வொத்தமானது கையெழுத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கானிஸ்தான் விவகாரம், தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய விடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

#IndiaNews

Exit mobile version