செய்திகள்
நீரில் மூழ்கிய 20 வயது இளைஞன் பலி!!


மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) பிற்பகல் மகாவலி கங்கையில் ஐந்து பேர் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர்.
அவர்களில் இருவரை மக்கள் காப்பாற்றி வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
பெண் ஒருவரும் சிறுமியும் காணாமல் போயுள்ளதுடந்-, 20 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் கண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது,
காணமல் போனவர்களை தேடும் பணியில் பொலிசார் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.