செய்திகள்
வெடித்தது எரிமலை: 13 பேர் பலி; 100 பேர் காயம்


இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால், எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களைச் சூழ்ந்தன.
அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது. எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
எனினும் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டதாகவும், அதிகரிக்கும் வெப்பக் காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர். எரிமலையை சுற்றி 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.