அநுராதபுரம்-குருந்தன்குளம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவமானது நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.
எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பேக்கரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளதாக அறியமுடிகிறது.
இதனையடுத்து, பிரதேச மக்கள் இணைந்து குறித்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
#SriLankaNews
Leave a comment