செய்திகள்
ஞானசார தேரருக்கு கல்முனையில் அமோக வரவேற்பு


கலகொடவத்த ஞானசார தேரர் கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரும் சென்ற பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் இருந்து அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்விஜயத்தின் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும் அவர்களின் நிகழ்வுகள் சார்ந்தும் தெரிந்து கொண்டுள்ளார்.
அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் முன்மொழிய போவதாக ஞானசார தேரர் இதன்போது தெரிவித்தார்.