செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுவிக்க தமிழக அரசு முயற்சி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலைத் தொடர்பாக திமுக அரசு எவ்வித நாடகமும் ஆடவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பல வருட காலமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 நபர்களையும் சட்டத்துக்குட்பட்டு விடுதலை செய்ய தமிழக முதல்வர் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். எவ்வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வெளியில் கூற இயலாது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போன்று அரசு எவ்வித நாடகமும் ஆட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#IndiaNews
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: சாந்தன் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் - tamilnaadi.com
Pingback: ஆபத்தான நிலையில் சாந்தன்: தாயாரின் கோரிக்கை - tamilnaadi.com