செய்திகள்
விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் சந்தேகநபர் கைது


கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் பொற்றாசியம் – பெர்குளோரைட்டு எனப்படும் வெடி மருந்து காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிந்த நபர் நீர்கொழும்பை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளதால் அனுமதியுடனேயே குறித்த வெடிமருந்தை கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.