LOADING...

மார்கழி 4, 2021

பாகிஸ்தானில் இலங்கையருக்கு நடந்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்த த.மு.கூ.தலைவர்!!

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

இன்று (04) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து  உரையாற்றுகையில், பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்த துன்பகரமான சம்பவத்திற்கு அரசாங்கம் கேள்வி எழுப்பவேண்டும் . இதற்கான நீதிக்கு அரசாங்கம் போராட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பில் நூறுபேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார் இது வரவேற்கத்தக்கது.

இதே தவறுகள் மீண்டும் நடைபெறமுடியாத அளவிற்கு அரசுகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா செல்லவுள்ளது. இந்திய பிரதமரை சந்திப்பதற்கான முடிவுகள் இந்னும் எடுக்கப்படவில்லை. அவர்கள் முதலில் சென்று வரட்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Prev Post

மின்தடையால் மின்தூக்கியில் சிக்கிய எம்.பிக்கள்!!!

Next Post

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை சர்வதேசத்திடம் வழங்குங்கள்! – ஹர்ஷன ராஜகருணா

post-bars

Leave a Comment