ஜோவத் புயல் நாளை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜோவத் புயல் தீவிரடைந்து வருவதாகவும் நாளை ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் எனவும் ஆகையால் இந்தியாவில் கடும் மழை பெய்யுமெனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை உருவானது.
இது அந்தமான் கடலின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை நிலவியது.
இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்த நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது.
தொடா்ந்து, வடமேற்கு திசையில் நகா்ந்து புயலாக வலுப்பெற்றது.
ஜோவத் என்று பெயரிப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை ஒரிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 70 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்றுவீசக்கூடும்.
எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மறு அறிவித்தல் வரும் வரை செல்லவேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்விடங்களுக்கு இந்திய அரசு நிவாரண பணிகளை முன்னெடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
#INDIA
Leave a comment