governer np
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநருக்குக் கடிதம்

Share

இலங்கை பல்கலைக்கழகத்தில் 2019.12.31 திகதிக்குள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இதுவரை 60000 பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளில் யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை இன்று (29) கையளித்துள்ளனர்

2016 தொடக்கம் 2019 க்குள் பட்டம் முடித்தும் அரசாங்கம் கோரிய அனைத்து தகுதிகள் இருந்தும் இதுவரை பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்காமல் உள்ளதாகவும்,

எங்களுடன் எங்களுக்கு பின்பு பட்டம்முடித்த எங்களுடைய சமமான தகுதியை உடைய நண்பர்கள் இன்று பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்று 1 வருடமும் 3 மாதங்கள் நிறைவுபெற்றுவிட்டன.

IMG 20211129 WA0005

ஆனால், எங்களுக்கு இதுவரை எந்த ஒரு நியாயமும் கிடைக்கப்பெறவில்லை.

இதுவரை பல பெயர் பட்டியல்கள் வந்தும் எங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை.

இவ்வாறு பல பட்டதாரிகள் தாங்கள் தனியார்துறைகளில் மேற்கொண்டுவந்த வேலைகளை 2020.03.10 ம் திகதிகளில் இருந்தே விலகி இவ் பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

IMG 20211129 WA0004

எங்களால் எங்களுக்குரிய சகல தகமைகளையும் நிருபித்துக்கூட அமைச்சு எங்களைப் பற்றி கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. கடந்த 3 மாதம் மேன்முறையீடு செய்திருந்தோம்.

கிட்டத்தட்ட இவ்வாறான நிலையில் 465 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றோம்.

எங்களது பெயர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனை இன்னும் வெளியிடாமல் தாமதப்படுத்துகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் எங்களை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...