DSC 6275 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தடைகளைத் தகர்த்து தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல்

Share

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தடைகளைத் தாண்டி நேற்றைய தினம் தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும், வீடுகளிலும் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

நேற்று மாலை 6.05 மணியளவில் மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து, அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதையடுத்து, 6.07 மணியளவில் தமிழர் தாயகப் பகுதிகளிலும் தமிழர்கள் வாழும் தேசங்களிலும், ஒரே நேரத்தில் நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

தமிழர் தாயகத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றையதினம் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

கிளிநொச்சியில் – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களிலும், மன்னாரில் – பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டிவெளி துயிலுமில்லங்களிலும், யாழ்ப்பாணத்தில் – சாட்டி துயிலும் இல்லம், தீருவில் திடல், பருத்தித்துறை முனைப்பகுதி மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், முல்லைத்தீவில் வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுமக்கள், மாவீரர்களின் பெற்றோர், மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உணர்வுடன் ஒன்றுகூடி சுடர்களை ஏற்றினர்.

இதேவேளை அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத அரசியல் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தமது இல்லங்களில் சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://tamilnaadi.com/news/2021/11/27/maaveerar-day-pointpedro/

https://tamilnaadi.com/news/2021/11/27/maaveerar-naal-valvettithurai/

https://tamilnaadi.com/news/2021/11/27/maaveerar-naal-alampil/

https://tamilnaadi.com/news/2021/11/27/maaveerar-naal-raviraj-home/

https://tamilnaadi.com/news/2021/11/27/mullaitheevu-maaveerar-naal/

https://tamilnaadi.com/news/2021/11/27/heroes-day-commemorations-begin-in-diaspora-countries/

https://tamilnaadi.com/news/2021/11/27/maaveerar-day-sreedharan-paid-tribute/

https://tamilnaadi.com/news/2021/11/27/memorial-at-chatti-beach-overcoming-obstacles/

https://tamilnaadi.com/news/2021/11/27/commemorations-of-heroes-beyond-obstacles-at-the-university-of-jaffna/

https://tamilnaadi.com/news/2021/11/27/people-gather-in-valvettithurai-police-army-concentrated/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...