செய்திகள்
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையின்படி இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியூடாகவே நிலப்பகுதிக்கு நகர்ந்து புத்தளம் மற்றும் மன்னாருக்கு இடைப்பட்ட பகுதியூடாக அரபிக் கடலுக்கு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
தொடர்ச்சியாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
மீனவர்கள் எதிர்வரும் 27.11.2021 வரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login