செய்திகள்
முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மக்களிடையே ஏற்பட்ட பதற்றநிலை!
கார்த்திகை தீபத்திருநாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தீபமேற்றி தீபத்திருநாளை கொண்டாடிய வேளையில், அங்கு வந்த இராணுவத்தினரால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பல பாகங்களிலும் நேற்றைய தினம் இந்துக்களால் கார்த்திகை தீப விளக்கீடுகள் கொண்டாடப்பட்டது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் கடைகளிலும், வீடுகளிலும் விளக்குகளை ஏற்றி கொண்டாடினர்.
இதனை அறிந்து அங்கு வந்த இராணுவத்தினராலும் , இராணுவ புலனாய்வாளர்களாலும் மக்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இராணுவத்தினர் தீபம் ஏற்றப்பட்ட வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துக்கொண்டதாக முல்லைதீவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஜனநாயக நாட்டில் கலாசார பண்பாட்டுடன் கூடிய பண்டிகைகளை கூட கொண்டாட முடியாத சூழலில் தமிழர் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அச்சத்துடனேயே நாட்டில் வாழ வேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த 17 (புதன்கிழமை) அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் நினைவேந்தலுக்கு தடையுத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login