மெக்சிகோவில் போதைக்கும்பல்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
உலகில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையின் பிரதான இடமாக விளங்கும் மெக்சிக்கோவில், நாளாந்தம் போதைக்கும்பல்களிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வியாபாரப் போட்டி காரணமாக போதைக்கும்பல்களிடையே நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்தியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#world
1 Comment