சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப். இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்றிரவு சுமார் ஆறு மணிநேரம் செயலிழந்திருந்தது.
பிரதான இரண்டு செயலிகளும் திடீரென செயலிழந்தமையினால் மில்லியன் கணக்கான பயனர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,தமது சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறித்து பேஸ்புக் நிறுவனம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டு பயனர்களுக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 Comment