New Project 48
செய்திகள்இலங்கை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Share

மழையுடன் கூடிய வானிலையால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவளை,நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 39
செய்திகள்உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% அபராத வரி: உலக நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டிற்கும்...

world 38
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு விளையாட்டுகள்: சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியீடு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் போது...

world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

world 36
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தாக்குதல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, ஈரானின் லவான்...